மகளுக்கு 9 ஏ‼️ வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும் தாய் கீதாஞ்சனா விபத்தில் பலி‼️‼️‼️‼️‼️
திருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதியின், கும்புறுப்பிட்டிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் தாதி ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் கீதாஞ்சனா தேவி (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது மகள் இவ்வருட ஓ.எல் பரீட்சையில் 9 A பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிளும், பவுசரும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மோட்டார் சைக்கிளில் தாதி உத்தியோகத்தரும், ஆசிரியையும் கடமைக்காகச் சென்று கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது.
தாதியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது அக்காவான ஆசிரியையே படுகாயமடைந்துள்ளார்.
Post a Comment
Post a Comment