(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பணியிலிருந்து ஓய்வு பெற்று செல்லும் எம்.எல்.நசீர் அவர்களின் சேவைநலன் பாராட்டு நிகழ்வு கல்முனைப் பிரதேச செயலக சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் அவர்களின் நெறிப்படுத்தலில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர்களின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மன்ற தலைவர் என்.எம்.நௌசாத் தலைமையில் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (27) நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ்
விசேட அதிதியாக கல்முனை பிரதேச செயலாளார் ஜே.லியாக்கத் அலி,அதிதிகளாக சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பபித்தனர்.
Post a Comment
Post a Comment