ஜனனதின விழா!





 ( வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவு சத்யசாயி நிலையத்தின் ஏற்பாட்டில் பகவான் ஸ்ரீ சத்ய  சாயி பாபாவின்  97வது ஜனன தின  விழா இன்று (23) புதன்கிழமை நிலையத் தலைவர் எம்.இராஜேஸ்வரன் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

 ஜனன தின  விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 04.45 மணிமுதல்  ஒங்காரம், சுப்ரபாதம், நவரத்தினமாலை என்பன பாடப்பட்டு காலை  7 மணியளவில் தேரோடும் வீதி வழியாக ஊர்வலம் இடம்பெற்றது.

வீதி ஊர்வலத்தில் சாயி பக்தைகளான திருமதி பராபரம் துளசி ரஞ்சன், திருமதி புவனேஸ்வரி ஜெயகணேஷ், செல்வி முகூர்த்தனா ரவீந்திரன் ஆகியோர்  நகர சங்கீர்த்தன பஜனை பாடினர்.

ஊர்வலம் முடிவில் பிரசாந்திக் கொடியேற்றல் நிகழ்வு இடம்பெற்றது..

அதனைத் தொடர்ந்து  ஓம்காரம், பஜனை, சிறப்புப் பேச்சு, சாயி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு  பதக்கம் அணிவித்தல்  போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.