மாற்றப்பட்டபோது, தாம் அருகில் இருந்ததாகவும், அப்போது இம்ரான் நினைவோடு இருந்ததாகவும் அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
அகமது சட்டா, ஃபைசல் ஜாவேத் என்பவர்கள் இந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.
தகுதி நீக்கம்
பொதுப் பதவிகள் எதையும் இம்ரான்கான் வகிக்கக்கூடாது என்று கடந்த மாதம் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தாம் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்குக் காரணமான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்று இம்ரான் கான் கூறியிருந்தார்.
பிரதமர் பதவி வகித்தபோது வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருள்கள் தொடர்பாக தவறான விவரங்களைத் தாக்கல் செய்ததாகவும், அவை விற்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவற்றின் மூலம் வந்த வருவாய் விவரத்தையும் தவறாகக் காட்டியிருந்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், மோதிரம், கஃப்லிங்குகள் போன்றவை இந்த சர்ச்சைக்குரிய பரிசுப் பொருள்களில் அடக்கம்.
Post a Comment
Post a Comment