FAROOK SIHAN
250 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திய சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
திங்கட்கிழமை(21) இரவு விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட வீரமுனை பகுதியை சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் மேற்குறித்த போதைப்பொருளை கடத்தி செல்வதற்காக தயாராக இருந்த வேளை சந்தேக நபர் கைதானார்.
இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து 250 கிராம் பொதி செய்யப்பட்ட கேரளா கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்களான எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (13443) பொலிஸ் கன்ஸ்டபிள்களான நிமேஸ் (90699) அபேரட்ன(75812) சிந்தக ( 75492 ) வாகனச்சாரதி டபிள்யு.எம் குணபால (19401) அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்தே இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
Post a Comment
Post a Comment