வி.ரி. சகாதேவராஜா)
பொத்துவில் சின்னவட்டிவயலில் உள்ள தமிழர்களின் பூர்வீக காணி தொடர்பாக இரு சாராரும் ஏட்டிக்குப் போட்டியாக களத்தில் இறங்கியுள்ளார்கள்.
இது பூர்வீகமாக உறுதி ஆவணங்களுடன் கூடிய தனியார் காணி என்று தமிழ்த் தரப்பினரும் ,இல்லை இது அரச காணி எனவே பொத்துவில் பொது விளையாட்டு மைதானத்திற்கு தேவை என முஸ்லிம் தரப்பினரும் ஏட்டிக்குப் போட்டியாக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.
இது 100 வருடத்திற்கு மேலாக தமிழர்களின் உறுதிக்காணியாக இருந்து வந்துள்ளது என்று பொத்துவில் பிரதேச சபையின் உதவி தவிசாளர் பெருமாள் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் (13)ஊடக மாநாட்டையும் நடத்தி தெளிவுபடுத்தி அதற்கான சகல ஆவணங்களுடன் தயாராக இருக்கின்றார்கள்.
அதேபோல ,இது பொத்துவில் பொது விளையாட்டு மைதானத்திற்கு உரிய அரசகாணி என்று கூறி பொத்துவில் பிரதேச முன்னாள் தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் இன்று (14) திங்கட்கிழமை அனைவரையும் இதற்காக ஒன்று கூடுமாறும் பரவலாக நோட்டீஸ் ஒட்டி அழைப்பு விடுத்திருக்கின்றார்கள்.
இவ்வாறு ஏட்டிக்குப் போட்டியாக சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன.
இதனால் அங்கு இன உறவு சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Post a Comment
Post a Comment