கலைஞர் அருளானந்தம் சுதர்சன் ஆறு விருதுகளை வென்று சாதனை படைத்தார்




 

(வி.ரி.சகாதேவராஜா)



கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில்  (2020/2021 ) வீரமுனையைச் சேர்ந்த பல்துறை கலைஞர் அருளானந்தம் சுதர்சன் ஒரே தடவையில் ஆறு துறைகளில் ஆறு விருதுகளை வென்று சாதனை படைத்தார்.

அவர் இளங்கலைஞர் விருது, கலை இலக்கிய விருது ,பாடலாக்கம் -1 ம் இடம், சிறுகதை  -1ம் இடம் ,மரபுக்கவிதை -1ம் இடம், புதுக்கவிதை -2ம் இடம் ஆகிய ஆறு விருதுகளை பெற்றவர்

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா கடந்த வாரம் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில்  நடந்தேறியது . 

இதில்  அருளானந்தம் சுதர்சன் இளங்கலைஞர் விருதும் கௌரவிப்பும் பாராட்டும்  பெற்றதுடன் , அரச உத்தியோகத்தருக்கான கலை இலக்கிய போட்டியில் கவிதை,சிறுகதை,பாடலாக்கம் ஆகியவற்றில் முதலாம் இடத்தை பெற்று விருதுகளையும் பாராட்டுக்களையும்  சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டார்.

இவர் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர் ஆவார்.விழாவில் தனியொரு கலைஞர் அதிகூடிய விருதுகளை பெற்றதும் இவரே.

 இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுனர்  அனுராதா யகம்பத் சிறப்பு விருந்தினர்களாக அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.