(சுகிர்தகுமார்)
அம்பாரை மாவட்டத்தில் இயங்கிவரும் பாதிப்புற்ற பெண்கள் அரங்கமானது பெண்களை வலுவூட்டும் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை பலவருடங்களாக முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒர் அங்கமாக சேர்ச் போ கொமன்ட் கிறவுண்ட் (Search for Common Ground) ) நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த 3 வருடங்களாக பெண்களை பல்வேறு துறைகளிலும் வலுவூட்டும் பயிற்சி நெறிகள் திட்ட அறிக்கைகள் சமர்ப்பித்தல் அரசியலில் பெண்களின் வகிபாகம் அது தொடர்பான கலந்துரையாடல்கள் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
இதற்கமைவாக பெண்கள் பெற்றுக்கொண்ட பயிற்சி நெறிக்கு அமைவாக அவர்களால் முன்வைக்கப்பட்ட திட்ட அறிக்கையின் பயனாக சேர்ச் போ கொமன்ட் கிறவுண்ட் நிறுவனத்தின் நிதி ஈட்டத்தின் மூலம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக நடமாடும் இரு விற்பனை நிலையங்களை அமைத்து அதனை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு வில்கிளப் பெண்களின் ஒருங்கிணைந்த தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் பிரதேச சபை தவிசாளர் கிரோஜாதரன் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஹிசைன்டீன் நிருவாக உத்தியோகத்தர் க.சோபிதா தலைமையக சமுர்த்தி முகாமையாளர் கிருபாகரன் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ரவிச்சந்திரன் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் முஸ்பிறா பாதிப்புற்ற பெண்கள் அரங்க இணைப்பாளர் சைமன் வாணி திட்ட இணைப்பாளர் வாணி சுதா திட்டத்தினை முன்னின்று செயற்படுத்த உதவிய பிரதேச சபை உறுப்பினர் கிந்துஜா உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் வில்கிளப் பெண் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதேச செயலாளர் மற்றும் நிருவாக உத்தியோகத்தரினால் இரு விற்பனை நிலையங்களும் திறந்து வைக்கப்பட்டதுடன் விற்பனையும் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் பெண்களின் சுயதொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment