உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு




 


(வி.ரி. சகாதேவராஜா)


 சமகால பொருளாதார நெருக்கடியினால் சிக்கி தவிக்கும் ஒரு தொகுதி நலிந்த தாய்மாருக்கு பிரபல சமூக சேவையாளரும் காரைதீவு பிரதேச சபை தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உலருணவு பொதிகளை வழங்கி வைத்தார்.

 திருக்கோவில் பிரதேசத்தில் பின்தங்கிய
விநாயகபுரம் பாலக்குடா போன்ற பகுதிகளில் வசிக்கும் மிகவும் கஷ்டப்பட்ட 100 தாய்மார்களுக்கு குறித்த பொதிகள் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டது.

 அச்சமயம் சமூக செயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜாவும் சமுகமளித்து இருந்தார்.

 கொரோனா காலம் தொடக்கம் இதுவரைக்கும் எமக்கு உலர்உணவு வழங்கி வருகின்ற சமூக சேவையாளர் ஜெயசிறிலுக்கு அந்த மக்கள் நன்றி தெரிவித்தார்கள்