வி.சுகிர்தகுமார்
2022 ஆண்டிற்குரிய அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் மகா வித்தியாலயத்தின் கணித முகாம் நடைபெற்றது.
பாடசலையின் அதிபர் திருமதி ஆர். நித்தியானந்தன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற கணித முகாம் நிகழ்வில் திருக்கோவில் கல்வி வலயத்தின் கணித பாடத்திற்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் கே.தயாரூபன் கணித பாட ஆசிரிய ஆலோசகர் எஸ்.சசிகரன் பாடசாலையின் பிரதி அதிபர் கே.தங்கவடிவேல் உதவி அதிபர் எஸ்.கிருபாகரன் உதவி அதிபர் ந.நேசராஜா உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள என பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் பிரதான வீதியில் இருந்து பாண்ட் வாத்திய குழுவினரின் வரவேற்பு இசையோடு ஆரம்பமான நிகழ்வில் அதிதிகள் அழைத்து வரப்பட்டு பாடசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதுடன் மாணவர்கள்; மாலை அணிவித்து வரவேற்றனர்.
இதன் பின்னராக பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அதிபர் பிரதி அதிபர் உதவி அதிபர் உதவிக்கல்விப்பணிப்பாளர் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் உரையாற்றியதுடன் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு தொடர்பிலும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஜெம் செயற்றிட்டத்தின் கீழ் மாணவர்களின் கணித அறிவை விருத்தி செய்யும் வகையில் இடம்பெற்ற கணித முகாமில் மாணவர்கள் உருவாக்கப்பட்டு பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த கணித பாடத்துடன் தொடர்பு பட்டதான ஆக்க பொருட்களை பார்வையிட்ட அதிதிகள் அதற்கான விளக்கத்தினை மாணவர்கள் மத்தியில் இருந்து பெற்றுக் கொண்டனர்.
இதேநேரம் அங்கு வருகை தந்த அனைத்து மாணவர்களுக்கும் செய்முறை விளக்கங்களும் மாணவர்களால் வழங்கப்பட்டன.

Post a Comment
Post a Comment