(காரைதீவு சகா)
சம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட 86 வருடகால வரலாற்றைக் கொண்ட நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் இம்முறை வெளியாகிய க.பொ.த. சா.தரப் பரீட்சையில் நான்கு மாணவிகள் 9 ஏ சித்திகளை பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்கள்.
அன்பழகன் பிரஜீத், ரவிச்சந்திரன் தனுஷா, பாலச்சுந்தரம் தனுக்ஷன் ,புஷ்பராஜா அபினேஷ் ஆகிய மாணவர்கள் 9ஏ சித்தி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளதாக அதிபர் சீ.பாலசிங்கன் தெரிவித்தார்.
அதேவேளை பரராஜசிங்கம் நிலக்ஸா , தேவகுமார் பிரனிதா ஆகியோர் 8 ஏ பி சித்திகளை பெற்றுள்ளனர்.
அங்கு தோற்றிய 30 மாணவர்களுள் 22 மாணவர்கள் கணிதம் மற்றும் தமிழ் பாடங்களுடன் சித்தி பெற்றுள்ளார்கள்.மீதி 08 மாணவர்கள் கணிதம் அல்லது தமிழ் பாடங்களுடன் சித்தி பெற்றுள்ளார்கள்.
சாதனை படைத்த மாணவர்கள் இன்று(28) திங்கட்கிழமை அதிபர் சீ. பாலசிங்கன் தலைமையில் பாராட்டு விழா நடைபெறவிருக்கின்றது .
விழாவிற்கு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ் எம் எம் .அமீர் , பிரதேச செயலாளர் என்.ரங்கநாதன்,பாடசாலை மேம்பாட்டு திட்ட கல்விஅதிகாரி வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.
இங்கு சகல பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment