முதல் தடவையாக 44 மாணவர்கள் 9ஏ சித்தி




 


(வி.ரி. சகாதேவராஜா)

 சம்மாந்துறை வலய வரலாற்றில், க.பொ.த. சா.தர பரீட்சை பெறுபேறுகளின்படி  முதல் தடவையாக 44 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளதாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ் எம் எம் . அமீர் தெரிவித்தார்.

இச் சாதனையில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் முப்பது(30) மாணவர்களுடன் பிரதான பங்கை வகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதைவிட, நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில்  நான்கு மாணவர்களும், சம்மாந்துறை அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நான்கு மாணவர்களும் 
9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
 ஏனைய ஆறு  பாடசாலைகளில் தலா ஒவ்வொரு மாணவரும் 9 ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர் .

கடந்த வருடம் 26மாணவர்கள்  9 ஏ சித்திகள் பெற்றிருந்தனர். இம் முறை அது 18 ஆல் அதிகரித்து 44 ஆக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

 இதேவேளை, கடந்த வருடம்  45 மாணவர்கள்  சகல பாடங்களிலும் சித்தியின்மையைப் காட்ட, இம்முறை அது 20 ஆல் குறைந்து 25ஆக மாறியுள்ளது. இது ஆரோக்கியமான வளர்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.

 இதற்காக ஒத்துழைத்த மாணவர்கள், பெற்றோர்கள், அதிபர்கள் ,ஆசிரியர்கள், கல்வி சார்ந்த உத்தியோகத்தர்கள் அனைவரையும் நன்றியுடன் பாராட்டுகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.