ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை உச்சி முகர்ந்தது இங்கிலாந்து. டி20 வரலாற்றில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2வது முறையாக உலக கோப்பையை வென்றுள்ளது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் குறைவாகவே ரன் எடுத்தது. ஆனாலும் இரண்டாவது பேட் செய்த இங்கிலாந்துக்கு இது மிக இலகுவான வெற்றியாக இல்லாத வகையில், அல்லது பாகிஸ்தானுக்கு படு தோல்வியாக இல்லாத வகையில் ஆட்டம் கடைசி ஓவருக்கு முந்தைய ஓவர் வரை நீடித்தது.
இதற்கு பாகிஸ்தானின் அச்சுறுத்தும் பந்துவீச்சே காரணமாக இருந்தது. முதலில் பாகிஸ்தான் கோட்டை விட்டது எங்கே?
பாகிஸ்தானுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. டெத் ஓவர்களில் எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் அதிரடியாக ஆடி ரன் ரேட்டை உயர்த்த முடியாமல் போனது. அதிரடியாக ஆட்டக்கூடிய முகமது நவாஸை முன்கூட்டியே களமிறக்கியிருக்கலாம்.
மொயின் அலி போன்ற சுழற்பந்துவீச்சாளர்களை அவர் அதிரடியாக எதிர்கொண்டிருந்தால் பாகிஸ்தானுக்கு கூடுதல் ரன்கள் கிடைத்திருக்கும் என்று கருதப்படுகிறது. இறுதிவரை இங்கிலாந்தின் பந்துவீச்சை பாகிஸ்தானால் முறியடிக்க முடியாமல் போனது.
தடுமாறிக் கொண்டிருந்த இங்கிலாந்து அந்த ஓவரின் கடைசி 2 பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்தது. மொயின் அலி 12 பந்துகளில் 19 ரன்கள் விளாசி மிரட்டினார். அத்துடன் பாகிஸ்தானின் போராட்டமும் முடிவுக்கு வந்தது. சிறப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. சாம் கரண் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். உலக கோப்பை வென்ற இங்கிலாந்து அணிக்கு 1.6 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
கை நழுவியது எப்படி?
பாகிஸ்தானின் பலம் பந்துவீச்சு. குறைந்த ரன்களை சேர்த்திருந்தாலும் இங்கிலாந்துக்கு தமது பந்துவீச்சால் முடிந்தளவு நெருக்கடி அளித்தது. அஃப்ரிடி, நசீம் ஷா, முகமது ரவுஃப் உள்ளிட்டோர் சிறப்பாகவே பந்துவீசினர். பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் சற்று கூடுதலான ரன்களை சேர்க்கத் தவறியது தோல்விக்கு பிரதான காரணம்.
பாகிஸ்தானுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. டெத் ஓவர்களில் எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் அதிரடியாக ஆடி ரன் ரேட்டை உயர்த்த முடியாமல் போனது. அதிரடியாக ஆட்டக்கூடிய முகமது நவாஸை முன்கூட்டியே களமிறக்கியிருக்கலாம்.
மொயின் அலி போன்ற சுழற்பந்துவீச்சாளர்களை அவர் அதிரடியாக எதிர்கொண்டிருந்தால் பாகிஸ்தானுக்கு கூடுதல் ரன்கள் கிடைத்திருக்கும் என்று கருதப்படுகிறது. இறுதிவரை இங்கிலாந்தின் பந்துவீச்சை பாகிஸ்தானால் முறியடிக்க முடியாமல் போனது.
தொடங்கியது. எனினும் 6 ஓவர் பவர் பிளே முடிவில் பாகிஸ்தான் அணி 39 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
8-ஆவது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் வந்தார். அவரது முதல் பந்திலேயே முகமது ஹாரிஸ் முன்னே இறங்கி லாங் ஆன் திசையில் தூக்கி அடித்த பந்தை ஸ்டோக்ஸ் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் பிடித்தார். ஹாரிஸ் 12 பந்துகளில் 8 ரன்களை எடுத்து வெளியேறினார்.
முதல் பத்து ஓவர்களில் பாகிஸ்தான் அணி குறைந்த வேகத்திலேயே ரன்களை எடுத்தது. தொடர்ச்சியான பவுண்டரிகளை அந்த அணியால் அடிக்க முடியவில்லை. 10 ஓவர் முடிந்த போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 68 ரன்களை பாகிஸ்தான் அணி எடுத்திருந்தது.
பாபர் ஆஸம் அவுட் - தடுமாறிய பாகிஸ்தான்
கட்டுப்பாட்டிலேயே போட்டி இருந்தது.
தேவையான ரன்ரேட் குறைவாக இருந்ததால் அப்போது களத்தில் இருந்து ஹேரி ப்ரூக்கும், பென் ஸ்டோக்ஸும் மெதுவாக்வே ஆடத் தொடங்கினார்கள். 11 ஓவரில் 2 ரன்களும் 12-ஆவது ஓவரில் 3 ரன்களையும் மாத்திரமே அவர்கள் எடுத்தார்கள். விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள். ஆனால் 13-ஆவது ஓவரில் ஷதாப் வீசிய பந்தில் ஷாஹீன் ஷா அப்ரிடியிடம் பிடிகொடுத்து ப்ரூக் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இங்கிலாந்து வீரர்கள் ரன்களை எடுக்கத் தடுமாறினார்கள். 14-ஆவது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.
ஆனால் மொயின் அலியும் பென் ஸ்டோக்ஸும் விக்கெட்டை இழக்காமல் ஆடிக் கொண்டிருந்தனர். 16-ஆவது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் ஒரு சிக்சரும் பவுண்டரியும் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்தினார். 17-ஆவது ஓவரில் மொயின் அலி 3 பவுண்டரிகளை விளாசினார். அதனால் இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி எளிதாக முன்னேறியது.
19-ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் பென் ஸ்டோக்ஸ் வெற்றிக்கான ரன்னை எடுத்தார். இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 49 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை.
Post a Comment
Post a Comment