கிழக்கு மாகாணமட்ட மனைப்பொருளியல் பாடத்துக்கான வினா விடைப் போட்டியில் 10 மாணவர்கள் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.
இவர்களுக்கான தேசிய மட்டப் போட்டி நாளை (25) வெள்ளிக்கிழமை மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் நடைபெற இருக்கின்றது..
கிழக்கு மாகாண மட்ட போட்டி கடந்த 22ந் தேதி திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.
போட்டியில் ஏழு இடங்களை மட்டக்களப்பு மாவட்டமும், இரண்டு இடங்களை அம்பாறை மாவட்டமும் ,ஓர் இடத்தை திருகோணமலை மாவட்டமும் பெற்று கொண்டது.
2022 ஆம் ஆண்டில் தரம் 11 சாதாரண தரப் பரிட்சைக்கு மனைப் பொருளியல் பாடத்தில் தோற்ற இருக்கின்ற மாணவர்களின் அறிமுறை மற்றும் செயன்முறைத் திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் இவ் வினா விடை போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment