எடை குறைந்த பாண் தொடர்பில் முறையிடுங்கள்!




 குறைந்த நிறை கொண்ட பாண் விற்பனை செய்யும் கடைகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு அளவீட்டு அலகுகள் மற்றும் தரநிலை சேவைகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

011 2 18 22 50 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அதன் பணிப்பாளர் நாயகம் சுஜீவ அக்குரந்திலக்க குறி
ப்பிட்டுள்ளார்.