சாய்ந்தமருதிலுள்ள அலுவலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு செல்வதற்கு சந்தர்ப்பம் பார்த்திருப்பதாகவும் அறியப்படுகிறது. இது தொடர்பாக இதுவரை எந்த முறைப்பாடுகளும் நமது தரப்பிலிருந்து கொடுக்கப்படாததை அவர்கள் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். அம்பாறைக்கு தற்காலிகமாகக் கொண்டு செல்லப்பட்ட கணக்குப் பிரிவினை மீண்டும் சாய்ந்தமருதிலுள்ள உத்தியோகபூர்வ மாகாண அலுவலகத்திற்கு எடுத்து வராமல் அங்கேயே நிரந்தரமாக நடை முறைப்படுத்துவதற்கும், சாய்ந்தமருதிலுள்ள அலுவலகத்தின் ஏனைய பொருட்களையும் அம்பாறைக்கு கொண்டுசெல்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை அலுவலகத்திலுள்ள சில உயரதிகாரிகளின் ஒத்துழைப்பும் பெறப்படுகிறது.
கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட வேளையில் கௌரவ பிரதமர் அவர்கள் அதனை உடனடியாக தடை செய்திருந்தார். இருந்த போதிலும் பிரதமரின் கட்டளையைக்கூட கவனத்திற் கொள்ளாமல் சில அதிகாரிகள் தற்பொழுது மீண்டும் தாம் நினைத்தவாறே செயற்பட முயற்சிக்கின்றனர். இதன் காரணமாகவே இதுவரை சாய்ந்தமருதிலுள்ள மாகாண அலுவலகத்திற்கான பெயர்ப்பலகை கூட காட்சிப்படுத்தப்படாமல் மறைக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக நாம் மாகாணப் பணிப்பாளரின் கவனத்திற்கு பலமுறை தெரியப்படுத்தியும் அது தொடர்பாக அவர் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதையிட்டு இளைஞர்களாகிய நாம் பெரும் வருத்தமடைவதுடன், இளைஞர்களுக்கான அலுவலகத்தில் இளைஞர்களின் கோரிக்கை கவனத்திற் கொள்ளப்படுவதில்லை என்பதையிட்டும் கவலையடைகினுறோம்.
Post a Comment
Post a Comment