அம்பாரை மாவட்ட மக்களும் தீபாவளியினை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கொண்டாடி வருகின்றனர்





 (சுகிர்தகுமார்)


  உலகவாழ் இந்து மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இம்முறை இலங்கை வாழ் இந்து மக்களாலும் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது.

இதற்கமைவாக அம்பாரை மாவட்ட மக்களும் தீபாவளியினை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கொண்டாடி வருகின்றனர்.

அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலும், அக்கரைப்பற்று ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் விசேட பூஜைகள் இடம்பெற்றன.

ஆயினும் பக்தர்களின் வருகை குறைவடைந்த நிலையில் குறிப்பிட்ட பக்தர்களின் பிரசன்னத்தோடு வழிபாடுகள் இடம்பெற்றது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீP ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் மற்றும் சிவஸ்ரீ க.தவேந்திரக்குருக்கள் ஆகியோர் பூஜை வழிபாடுகளை நடாத்தி வைத்தனர்

இதேநேரம் நரகாசூரன் எனும்  மகா கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் வதம் செய்து அழித்தொழித்த பெருமைக்குரிய இத்திருநாளில் வேற்றுமை அகன்று நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் எனவும் பொருளாதர நெருக்கடியில் இருந்து நாடு மீளவேண்டும் எனவும் அமைதியான முறையில் பிரார்த்தனை வழிபாடுகளிலும் மக்கள் ஈடுபட்டனர்.

பின்னர் பிரதமகுரு உள்ளிட்ட பெரியோர்களிடம் சிறியவர்கள் ஆசீர்வாத்தினை பெற்றுக்கொண்டனர்.