பனங்காடு பிரதேச வைத்தியசாலையின்குடிநீர் இணைப்பு




 


(வி.சுகிர்தகுமார்)



  ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி பாதையில் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்துள்ள வைத்தியசாலைக்கான குடிநீர் இணைப்பு மற்றும் முழுக்கிராமத்திற்குமான குடிநீர் இணைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் யு.எம்.எல்.சகீல் தலைமையில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு மாகாண பிரதி பொதுமுகாமையாளர் பொறியியலாளர் என்.சுதேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குடிநீர் இணைப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் உதவிச் செயலாளருமான வி.பபாகரன் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பாரை மாவட்ட உதவிப்பொது முகாமையாளர்; பொறியியலாளர் கே.வினோதன் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் யு.கே.எம்.முஜாகித் அம்பாரை மாவட்ட பிரதான பொறியியலாளர் ரி.சிவராஜ் அக்கரைப்பற்று பிரதேச பொறியியலாளர் பி.மயூரதன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாரை மாவட்ட பொறியியலாளர் என்.லோகிஸ் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று நிலைய பொறுப்பதிகாரி சஹீம் பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் குணாளினி சிவராஜ் உள்ளிட்ட வைத்தியர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகளை வைத்தியசாலை அபிவிருத்திக்குழு வைத்திய குழாமினர் இணைந்து வரவேற்றனர். இதன் பின்னர் சம்பிரதாய பூர்வமாக குடிநீர் இணைப்பினை நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு மாகாண பிரதி பொதுமுகாமையாளர் பொறியியலாளர் என்.சுதேசன் அங்குராhப்பணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பொறுப்பதிகாரி வைத்தியர் சகீல் வைத்தியசாலையின் பலவருடகால தேவைப்பாடு பூர்த்தி செய்யப்பட்டமையிட்டு மகிழச்சி தெரிவித்தார். இதற்கான உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்தார்.

இதேநேரம் இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளரும் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் உதவிச் செயலாளருமான வி.பபாகரன் குறித்த முயற்சிக்கு பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கி ஒவ்வொருவருக்கும் நன்றி கூறினார். மேலும் பனங்காட்டு கிராமத்து மக்களது கோரிக்கையாகவும் பெருந்தேவைப்பாடாகவும் நீண்டகாலமாக இருந்து வந்த அத்தியாவசிய தேவை நிறைவு செய்யப்பட்டமையிட்டு பிரதேச செயலாளர் எனும் ரீதியில் மகிழ்ச்சி தெரிவித்தார்.