கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நிகழ்வு




 


(வி.ரி. சகாதேவராஜா)


அம்பாறை மாவட்ட கஷ்டப்பிரதேச தேவையான மாணவர்களுக்கு கல்முனை ரோட்டரி கழகம் கற்றல் உபகரணங்களை வழங்கி உதவிவருகின்றது.

கழகத்தின் புதிய தலைவர் றோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன் தலைமையில் இவ் உதவித் திட்டம் முன்னெடுக்கபட்டு வருகிறது.

 கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நிகழ்வின் 4ஆம் கட்டமாக திருக்கோவில் வலயத்துக்கு உட்பட்ட நான்கு பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

 மண்டான அ.த.க. பாடசாலை, பாலக்காடு பால விநாயகர் வித்தியாலயம், விநாயகபுரம், தம்பிலுவில் கனகரத்தினம் மகாவித்யாலய  மாணவர்களுக்காக 375,000 செலவில் இவை வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் கல்முனை ரோட்டரி கழகத்தலைவர் றோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான நிதியுதவி அவுஸ்ரேலிய  கன்பேரா வெஸ்டர்ன்  கிறிக் ரொட்டரிக் கழகத்தினால் 4ம் கட்டமாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.