(நூருல் ஹுதா உமர்)
இணைந்த கரங்கள் அமைப்பினால் கமு/சது/விபுலானந்தா மகா வித்தியாலய க.பொ.த சாதாரண பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கும் நிகழ்வானது இன்று பாடசாலை அதிபர் திருமதி. கெளசல்யா கணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
80 மாணவர்களுக்கான க.பொ.த சாதாரண பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கும் இந்நிகழ்வில் பாடசாலையின் உப அதிபர் கே.ரமேஸ்வரன், பகுதி தலைவர் ஆர்.ரெட்ணகுமார், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், இணைந்த கரங்கள் அமைப்பின் பிரதிநிதிகளான லோ. கஜரூபன், எஸ்.காந்தன், கி. சங்கீத்,ரா.தஜன் ஆகியோரினால் கல்விகற்கும் மாணவர்களுக்கு பெறுமதியான மாதிரி வினாத்தாள்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் பிரதிநிதியாக கலந்து கொண்ட லோ. கஜரூபன் கருத்து தெரிவிக்கையில் இதற்குரிய முற்று முழுதான நிதி பங்களிப்பை வழங்கிய, இணைந்த கரங்களுடாக கைகோர்த்து இடை விடாது நம் பயணத்தின் நோக்கத்தையும், நம் மாணவச் செல்வங்களின் வலியையும் உணர்ந்து அடுக்கடுக்காக இணைந்த கரங்களுடாக உதவி வரும் சகோதரி அனு குடும்பத்தினர், அவர்களது உறவினர்களும் நண்பர்களும் இணைந்து வழங்கி வருகின்றார்கள். இவர்களுக்கு என் நெஞ்சாந்த நன்றியை இணைந்த கரங்கள் ஊடாகவும், என் சார்பாகவும் கூறிக்கொள்கிறேன் என்றார்
Post a Comment
Post a Comment