.(சுகிர்தகுமார் )
அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயராம மகா விகாரையின் வருடாந்த கட்டின விழாவும் பெரகராவும் பிங்கம நிகழ்வும் நேற்று மாலை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
விகாரையின் பிரதம விகாராதிபதி தேவகொட சோரத்த தேரர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அதி வணக்கத்திற்குரிய பலாங்கொட மண்டாவல ஸ்ரீ சுதர்மாராதிபதி பகவந்தலாவ ராகுல சுவாமியின் தமிழ் மொழி மூலமான விசேட தர்மபோதனை நடைபெறவுள்ளதுடன் அதி வணக்கத்திற்குரிய கொழும்பு ஜயவர்த்தனபுர உடுவன ரத்னபால நாயக சுவாமியின் போதனையும் இடம்பெறவுள்ளது.
; பெரகாரா நிகழ்வு அக்கரைப்பற்று 241ஆம் படைப்பிரிவின் தலைமை அலுவலகத்தின் விகாரையில் நேற்று மாலை இடம்பெற்ற பூஜைகளை தொடர்ந்து அங்கிருந்து ஆரம்பமானது.
இதில் பௌத்த கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான பல்வேறு நடன நாட்டிய நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் அங்கிருந்து எடுத்துவரப்பட்ட பூஜை தட்டும் அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயராம மகா விகாரையினை அடைந்தது.
இதன் பிற்பாடு இன்று நண்பகல் பிங்கம வழிபாடுகளும் பூஜைகளும் ஆரம்பமானது. இதில் வணக்கத்திற்குரிய தேரர்கள் பலர் கலந்து கொண்டு போதனையினை வழங்கி பூஜைகளை நடாத்தி வைத்ததுடன் அனைத்து மக்களது நலன் வேண்டி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பிக்குமார்களுக்கான தானமும் வழங்கப்பட்டது.
குறித்த வழிபாடுகளில் மதங்களை கடந்து பல்லின சமூகத்தினரும் கலந்து கொண்டதுடன் இராணுவ உயர் அதிகாரிகள் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேநேரம் இன்று மாலை அதி வணக்கத்திற்குரிய பலாங்கொட மண்டாவல ஸ்ரீ சுதர்மாராதிபதி பகவந்தலாவ ராகுல சுவாமியின் தமிழ் மொழி மூலமான விசேட தர்மபோதனையும் நடைபெறவுள்ளதுடன் அதி வணக்கத்திற்குரிய கொழும்பு ஜயவர்த்தனபுர உடுவன ரத்னபால நாயக சுவாமியின் போதனையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment