(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டத்தின், அம்பகமுவ பிரதேச அபிவிருத்திக்குழு தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமையவே அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடமிருந்து, ராமேஷ்வரன் எம்.பி. இன்று (22.10.2022) பெற்றுக்கொண்டார்.
Post a Comment
Post a Comment