நூருல் ஹுதா உமர். பீ.எம்.நாஸிக் )
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கல்விக்கோட்டத்தின் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (GMMS) தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அதிபர் எம்.ஐ.எம் இல்லியாஸின் வழிகாட்டலிலும் ஆசிரியர்களின் நெறிப்படுத்தலிலும் பல செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
அதன் தொடர்ச்சியாக இன்று தொடக்கம் இம்மாத இறுதிவரை வாசிப்பு முகாம் (Reading Camp) பாடசாலையில் நடைபெற்று வருகின்றது. இந்த முகாமில் பாடசாலை மாணவர்களின் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.அஸ்மி, பாடசலை பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் எனப்பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment