வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கின் பிரபல தொழிலதிபரும் மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவருமான சைவப்புரவலர் விநாயகமூர்த்தி ரஞ்சித மூர்த்தி அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றினால் வர்த்தகத் துறைக்கான "கௌரவ கலாநிதி" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்.
அமெரிக்க தேசிய வர்த்தக பல்கலைக்கழகமானது (Américan National Business University) உலகளாவிய ரீதியிலே நடத்திய தேர்விலே இலங்கையின் மட்டக்களப்பில் இருந்து பிரபல தொழிலதிபர் ரஞ்சிதமூர்த்தியை தெரிவு செய்திருக்கிறது.
"Doctor of Business Administration ",என்ற இப் பட்டத்தினை பெற்ற டாக்டர் ரஞ்சிதமூர்த்தி முதலாவது கிழக்கு மாகாணத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கான விருது வழங்கும் வைபவம் நேற்று (26) கொழும்பு தாஜ்சமுத்ரா நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதேவேளை ,இலங்கை சாதனையாளர் மன்றம் ரஞ்சிதமூர்த்தி அவர்களுக்கு "லங்கா தேசமான்ய "என்ற கௌரவப்பட்டத்தினையும் வழங்கி கௌரவித்திருக்கின்றது .
இந்த உயரிய இரு கௌரவங்களைப் பெற்ற டாக்டர் ரஞ்சித மூர்த்திக்கு பல நாடுகளிலுமிருந்து பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்ட வண்ணம் இருக்கிறது.
களுவாஞ்சிகுடியில் பிறந்த டாக்டர் ரஞ்சிதமூர்த்தி, தற்சமயம் மட்டக்களப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். நிருமாணத்துறையில் கொடி கட்டிப் பறக்கும் அவர் பல நிறுவனங்களின் தொழிலதிபராக இருக்கிறார்.
பிரபல தொழிலதிபரும்,மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவருமான சைவப்புரவலர் வினாயகமூர்த்தி ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தன்னலமற்ற அப்பழுக்கற்ற சமூக சேவை சைவம் தமிழ் என்று பரந்து விரிந்து நிற்கின்றது.
இன்று அவரை கௌரவ வர்த்தக கலாநிதியாகவும் லங்கா தேசமானிய கௌரவத்தினையும் வழங்கி நமக்கெல்லாம் பெருமை சேர்த்திருக்கின்றது. இந்த உயரிய கௌரவத்தினை வழங்கிய அமெரிக்கா தேசிய பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை சாதனையாளர் மன்றத்திற்கும் எமது நன்றிகள். அவரது பணிகள் இன்று நாடறிந்த நிலையில் அவரை மனதார வாழ்த்துவோம்!! கவிஞர் கண்ணதாசனின் பாடலொன்று நினைவுக்கு வருகின்றது. "மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்! மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழவேண்டும்." என்று பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்ட வண்ணம் இருக்கிறது.
Post a Comment
Post a Comment