நூருல் ஹுதா உமர்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தனது 26 ஆவது ஆண்டு விழாவை நேற்று செவ்வாய்க்கிழமை 25 .10. 2022 இல் வெகு விமர்சையாக கொண்டாடியது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடாதிபதிகள், நூலகர், பதிவாளர், பேராசிரியர்கள் , கல்விசார் , கல்வி சாரா மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். உபவேந்தர் விருதுகள் ஒவ்வொரு பீடங்களிலும் அதிஉயர் தர ஆய்வுக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் மிக அதிககாலம் 30 மற்றும் 25 வருடங்கள் சேவை அனுபவம் கொண்டவர்களுக்கு வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் முக்கிய ஒரு அம்சமாக தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர்களால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு நூலக தகவல் வலையமைப்பு உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் அவர்களால் அங்குரார்பணம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதான நூலகர் எம் எம் றிபாயுதீன் இந் நூலக வலையமைப்பின் இணைப்பாளரான கலாநிதி எம் எம் மஸ்ரூபா செயலாளர் ஏ. எம். நஃபீஸ் பொருளாளர் எம். சி. எம். அஸ்வர் உதவி செயலாளர் ஜனாப் எஸ். எல். எம். சஜீர் இணைய ஒருங்கிணைப்பாளர் ஏ. ஜே. அஸ்லம் சாஜித் ஆகியோருடன் வலயக் கல்வி பணிமனைகளில் இருந்து வருகை தந்திருந்த பிரதி கல்விப் பணிப்பாளர்கள், மாநகர சபை ஆணையாளர்கள், பிரதேச சபை செயலாளர், ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அதிபர்கள், ஆசிரியர் நூலகர்கள், பொது நூலகர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர் எம். எம். றிபாவுத்தீன் தனது அங்குரார்ப்பண உரையில் குறித்த நூலக தகவல் வலையமைப்பு அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்லூரிகள், பாடசாலைகள் மற்றும் பொது நூலகங்களுடன் பங்குபற்றுதலோடு மிகச் சிறப்பான நூலகர்களை வலுவூட்டல் சேவைகள், திறன் விருத்தி பயிற்சிகள், வாசிப்பு மேம்பாடு நூலக தகவல் விஞ்ஞான பயிற்சி பட்டறைகள் போன்றவற்றை நடத்துவதன் மூலம் அறிவார்ந்த சமூகம் ஒன்றை கட்டி எழுப்ப முடியுமென்று கூறினார். இந்நூலக தகவல் வலையமைப்பு SERLIN South Eastern Regional Library and information Network Sri Lanka என்று பெயரிடப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment