அக்கரைப்பற்று நீதவான், மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதியாக திருமதி தெசிபா ராஜா நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைப் பிறந்தகமாகக் கொண்ட யாழ்ப் பல்கலைக்கழகப் சட்டமாணிப் பட்டதாரியான இவர், அங்கு விரிவுரையாளராகவும் பணிபுரிந்ததுடன், பின் நாட்களில் தனியார் வங்கியின் சட்ட ஆலோசகர் பதவியும் வகித்தவர்.
இலங்கை நீதிச் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இறுதியாக இடம்பெற்ற நீதிபதிகளுக்கான பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் இவரும் ஒருவராவார்.
இலங்கையின் வட மாகாண நீதிமன்றத்தில் மேலதிக நீதிபதியாகப் பணிபுரிந்த இவர்,2022 நவம்பர் முதலாம் திகதி முதல் அக்கரைப்பற்றில் கடமையேற்கவுள்ளார்.
Post a Comment
Post a Comment