இலங்கை அணியை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி




 




உலகக்கிண்ண ரி20 தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணியை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.


போட்டியின் நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

துடுப்பாட்டத்தில் Glenn Phillips 104 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணி சார்ப்பில் கசுன் ராஜித்த 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் 168 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் Trent Boult 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

துடுப்பாட்டத்தில் தசுன் சானக 35 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஷ 34 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் நியூசிலாந்து அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.