சூட்சுமமான முறையில் 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபர் கைது




 


பாறுக் ஷிஹான் 

 
  
வீடு ஒன்றின் தோட்டத்தில் சூட்சுமமான முறையில்  53  கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை  சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம்  சவளக்கடை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அன்னமலை பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக  இரகசிய தகவல் ஒன்றை அடுத்து  பொலிஸார் திங்கட்கிழமை(24) தீபாவளி தினத்தன்று   சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான  டீ.எம்.எஸ்.கே தசநாயக்க  தலைமையிலான சார்ஜன்ட்களான   றவூப்(57321) ,ஜெசில் (44060) ,உவைஸ் (63832) ,பொலிஸ் கன்ஸ்டபிள்களான திசாநாயக்க (70302) ,சம்பத் (70337) ,பெண் பொலிஸ் கன்ஸ்டபிள் குமாரி(2482) ,ஆகியோர் தேடுதல் மேற்கொண்டு சந்தெக நபரை     கைது செய்தனர்.

இவ்வாறு கைதானவர்  அன்னமலை பகுதியை  சேர்ந்த 58 வயதான  சந்தேக நபர்  என்பதுடன்  வீட்டின் தோட்டத்தில் உள்ள பயிர்களுடன்  இணைத்து குறித்த 53  கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன்  கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சான்று பொருட்கள் யாவும்   நீதிமன்றத்தில் பாராப்படுத்த  நடவடிக்கை  பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.