கிழக்கில் 397 கணித பாட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை! ஆனால் கல்முனையில் 397 ஆசிரியர்கள் மேலதிகம்!! சமப்படுத்துமாறு ஆளுநர்





எதிர்காலத்தில் உயர்தர கணித விஞ்ஞான பாடங்களில் மாணவர்கள் கற்பதற்கு ஊக்குவிக்க வேண்டும்.


 அதிர்ஷ்டவசமாக சம்மாந்துறை வலயத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லை என்று சொல்லலாம்.

 ஆனால் அண்மையில் இருக்கக்கூடிய கல்முனை வலயத்தில் கிழக்கு மாகாணத்தில் அதிக கூடிய மிகையான ஆசிரியர்கள்   இருக்கின்றார்கள். 397 ஆசிரியர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். உலக வங்கி மற்றும் ஏனைய திட்டங்கள் மற்றும் கணக்காய்வு நிறுவனத்தின் அறிக்கைகளின் படி கல்முனை வலயத்திலே ஏகப்பட்ட பிரச்சனைகள் கேள்விகள் வருகின்றன.  இதனை சீர்செய்யுமாறு கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் எமது செயலாளரூடாக எனக்கு பணிப்புரை வழங்கி இருக்கின்றார். அதனை தொடங்க வேண்டும்.

 கல்முனையில் இருந்து இங்கு வந்து கற்பிக்கின்ற ஆசிரியர்களை பாராட்ட வேண்டும். மாணவருக்கு உரிய சேவையை நாம் வழங்கும்போது காலத்தால் அழியாத புகழை பெறுவோம்.

  என்னிடம் துறைநீலாவணையில் படித்த மாணவர்களான இளங்கோ, சர்வேஸ்வரன் ஆகியோர்  இங்கு ஆசிரியர்களாக  எனக்கு பாராட்டும் உரையும் நிகழ்த்தினார்கள். இது உண்மையிலேயே அவர்கள் வாழ்வில் மறக்க முடியாமல் இருக்கும்.

 எமது நிபுணத்துவங்கள் மாணவர்களில் பிரதிபலிக்க வேண்டும். ஒருவேளை மாணவர்கள் பரீட்சைகளில் தவறுகின்ற பொழுது எமது நிபுணத்துவத்தை நாம் சந்தேகிக்க வேண்டி நைரிடுகிறது. அதாவது நாம் சுய விமர்சனம் சுய பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு பாடசாலையின் வளர்ச்சியில் தான் அந்த சமூகத்தின் வளர்ச்சி தங்கி இருக்கின்றது. ஆசிரியர், அதிபர் இன்று இருப்பார் நாளை போவார். ஆனால் பாடசாலை இருக்கும் .எனவே நாங்கள் பாடசாலையை நேசிக்கின்ற அளவுக்கு அந்த பாடசாலை வளரும் என்பதில் ஐயமில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்  என்றார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் பாடசாலையாலும் வலயத்தாலும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

விழாவில், ஆசிரியர்கள் ஆளுருய மாலை சூட்டி மாணவர்களால் கௌரவிக்கப்பட்டார்கள்.
 அனைவருக்கும் நினைவு சின்னங்கள் அதிதிகளால் வழங்கப்பட்டன. 

அதே வேளை தேசிய ரீதியில் தெரிவான கபடி மற்றும் எல்லே வீராங்கனைகள் சிறப்பு பரிசுகள் நினைவு சின்னங்கள்  வழங்கி  கௌரவிக்கப்பட்டார்கள்.

விழாவில் வலய கல்வி பணிப்பாளர் எஸ் எம் அமீர், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் கே.குணரெத்தினம், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் தினேஷ் நன்றியுரையாற்றினார்.