காத்தான்குடி தாருஸ்ஸலாம் பாலர் பாடசாலையின் 22வது பாலர் கலை விழா கடந்த 28 .10. 2022 அன்று காத்தான்குடி மெரைன் டிரைவ், தாருல் அர்க்கம் மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபரும் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினருமான திருமதி பஹ்மியா ஷரீப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் IL. முஹம்மட் ரிபாஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வின் கௌரவ அதிதியாக BCAS Campusஇன் ஸ்தாபக பணிப்பாளரும் EduGate Global நிறுவனத்தின் பணிப்பாளருமாகிய பொறியியலாளர் MM. அப்துர்ரஹ்மான் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
சிறப்பு அதிதிகளாக அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் ATM.ராபி SLAS, காத்தான்குடி நகர சபையின் செயலாளர் திருமதி றிப்கா ஷபீன் , காத்தான்குடி நகர சபையின் உறுப்பினரும் ப.மு. நி. சம்மேளன செயலாளருமான ALM.சபீல் நளீமி ,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் MIM.கமால்டீன், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் MAM.சியாட், கல்முனைப்பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் AC.அப்துல் அஸீஸ், DKC முன்பள்ளியின் பணிப்பாளர் MYM.ஷரீப், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் MBM.பைரூஸ் மற்றும் ஆசிரியைகளான முப்லிஹா பிர்தௌஸ், றமீஸா நௌபி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி பாலர் கலை விழாவில் தாருஸ்ஸலாம் முன்பள்ளியின் மாணவர்களால் பல்வேறுபட்ட சிறப்பான, முன்மாதிரியான நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும் .
Post a Comment
Post a Comment