ஆலையடிவேம்பு பகுதியில் 110 வயதினை பூர்த்தி செய்த முதியவர் மறைவு





 வி.சுகிர்தகுமார்  


  ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 110 வயதினை பூர்த்தி செய்த நிலையில் வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் இன்று மரணமடைந்தார்.

 அலிக்கம்பை கிராமத்தை சேர்ந்த முத்து முத்துசாமி என்பவரே இவ்வாறு 110 வயதில் மரணமடைந்துள்ளார்.

1912ஆம் ஆண்டு 07ஆம் மாதம் 05ஆம் திகதி பிறந்த இவர் அலிக்கம்பை கிராமத்தில் 07 பிள்ளைகள் 25 பேரப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகளின் பிள்ளைகள் எனது மூன்று தலைமுறைகளை கடந்து தனது குடும்பத்தாருடன் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தவர் என்பதும் கிராமத்தின் மூத்த பிரஜை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் இந்திய தெலுங்கு வம்சாவளியினை சேர்ந்தவர் என்பதுடன் நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் ஆரம்பத்தில் வாழ்ந்;திருக்கலாம் எனவும் 1956 ஆண்டிற்கு பின்னரே அலிக்கம்பை கிராமத்தின் குடியேறி இருக்கலாம் நம்பப்படுகின்றது.