(நூருள் ஹுதா உமர்)
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் மற்றும் அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் ஆகியோரை பாராட்டும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை சாய்ந்தமருது "சீ பிறீஸ்" சுற்றுலா விடுதியில் சாய்ந்தமருது சமுர்த்தி மகா சங்க உதவி முகாமையாளர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்றமைக்காகவும், அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் மாவட்ட மக்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் சிறந்த முறையில் பணியாற்றி வருவதையிட்டும் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு உத்தியோகத்தர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், சமுர்த்தி மகா சங்க முகாமையாளர் ஏ.எல்.யூ. ஜூனைதா, வங்கி முகாமையாளர் எஸ். றிபாயா, கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.ஏ.கபூர், உதவி முகாமையாளர் எம்.யூ.ஹில்மி, வலய உதவி முகாமையாளர் எம்.எஸ்.எம். நெள ஷாட், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.ஜஃபர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப். றிகாஸா ஷர்பீன், கணனி உதவியாளர் எஸ். சாபித் அக்மல் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.
UMAR LEBBE NOORUL HUTHA UMAR
BBA (HRM), Dip.In. Journalism
Post a Comment
Post a Comment