நூருல் ஹுதா உமர்
USF ஸ்ரீலங்கா சமூக சேவை அமைப்பின் ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்களுக்கு "நாமும் சூழலும்" என்னும் தொனிப் பொருளில் எமக்குத் தேவையான உணவு வகைகளை நாமே தயார் படுத்துவோம் இன்னும் வேலை திட்டத்தின் கீழ் வீட்டுத்தோட்டம் செய்வதற்கான மரக்கன்றுகள் அமைப்பின் செயற்பட்டாளர்களுக்கு சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்வுக்கு அமைப்பின் ஸ்தாபக தலைவரான முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜீ.அன்வர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் யூ.எல். ஜெஸ்மிர், பிரதித் தலைவர், பிரதி அமைப்பாளர், நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Post a Comment
Post a Comment