உயிரியல் துறையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சாதனையாளர் தமிழ்வாணன் துவாரகேஸுக்கு வரவேற்பும் பாராட்டும்





 ( காரைதீவு சகா)


 அண்மையில் வெளியான கபொத உயர்தர பரீட்சை முடிவின்படி உயிரியல் துறையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த காரைதீவைச் சேர்ந்த தமிழ்வாணன் துவாரகேஷ் அவர்களுக்கு அவர் கற்ற பாடசாலையான ,மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் வரவேற்பும் பாராட்டும் நடைபெற்றது.

 பாடசாலை அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில், சாதனை மாணவனின் தந்தையார் டாக்டர் தமிழ்வண்ணன் ,அவரது தாயார் டாக்டர் பாகீரதி தமிழ்நாட்டின் ஆகியோர் வரவேற்கப்பட்டனர்.

 மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அருள் தந்தை ஜோசப் பொன்னையா அடிகளார் கலந்து சிறப்பித்தார்.
பாராட்டுரை வழங்கி சாதனை மாணவனுக்கு  பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

ஆசிரியர்கள் உள்ளிட்ட
பலரும் கலந்து கொண்டார்கள்.