தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை பெற முடியாமல் தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகளை பெற முடியாது .தற்போதைய ஜனாதிபதியிடம் தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் ஒன்றினைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.அது தவிர கல்முனை பிரச்சினை தொடர்பாக 29 வருடங்களாக இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை போராடுகிறீர்கள்.
இதனை தரமுயர்த்துவதா இல்லையா என்பதை முதலில் வினவுங்கள் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தியாகிகளை நினைவு கூருவோம்.அவர் தம் உறவுகளை கௌரவிப்போம் ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூறும் வைபவமும் அவர் தம் உறவுகளை கௌரவிக்கும் நிகழ்வும் சனிக்கிழமை(27) மாலை கல்முனை உவெஸ்லி தேசிய பாடசாலைக்கு அருகாமையிலுள்ள கிருஸ்டா இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) அம்பாறை பிராந்திய கல்முனை வலயத்தின் சிரேஸ்ட தோழர்களின் வடிவமைப்பில் மாவட்ட தோழர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக இடம்பெற்றது.
இதன் போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் டெலோ முக்கியஸ்தரும் கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான ஹென்றி மகேந்திரன் உட்பட பல முக்கியஸதர்கள் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
கடந்ம 1991 ஜூன் 19ஆம் திகதி சென்னையில் வைத்து ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் கே.பத்மநாபா உட்பட முன்னணி பேராளிகள் படுகொலை செய்யப்பட்ட மற்றும் இயக்கத்தின் படுகொலையான போராளிகளின் நினைவாவாக மேற்படி நிகழ்வு இடம்பெற்றதுடன் பத்மநாபாவின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தபட்டதுடன் ஏனையோரின் நினைவு உரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் புலம்பெயர் வாழ் கட்சி உறுப்பினர்களும் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment