மாபெரும் இரத்ததான முகாம்




 


மாபெரும் இரத்ததான முகாம் கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் வழிகாட்டலில் தஃவா குழுவின் ஏற்பாட்டில்  ஞாயிற்றுக் கிழமை (28)    பள்ளிவாசலில் இடம்பெற்றது.


ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.வி.எம். இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமானது கல்முனை  அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்திக்கும் பொருட்டு   ஏற்பாடு செய்யப்பட்டது.


 அஷ்-ஷெய்க் ஸாபித்தினால்  (ஸரயி, றியாதி)நெறிப்படுத்தபட்ட இந்நிகழ்வில்  கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ. எல். எஃப் .ரகுமான், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,  கல்முனை  பொலிஸ் நிலைய சமூக  பொலிஸ் பிரிவு  பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ. எல் ஏ. வாஹிட் , கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்மி, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை  வைத்தியர் ஏ.எஸ்.எம்.றிஸ்மியா,  கல்முனை பொலிஸ் நிலைய சமூக பாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி எம்.பி.எம்.அமான் ,கல்முனை  பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கே.எம்.எஸ்.குமார ,  உட்பட பள்ளிவாசல் நிர்வாகத்தினர் உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர். 

இந்த இரத்ததான முகாமில்  ஆண்கள் ,பெண்கள்  இளைஞர்கள்  விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள்  பொது அமைப்புக்கள்  பொதுமக்கள் என  இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.