நூருல் ஹுதா உமர்
இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிக்குட்பட்ட, வரிப்பத்தான்சேனை - 03 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நீண்டகாலமாகக் குடியிருந்துவரும் மக்களுக்கு காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ், புதிதாகக் காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் (08) ஆம் திகதி திங்கள் கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காணி உத்தியோகத்தர் என்.எல்.எம். மாஹிர் உட்பட காணிப் பிரவு உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment