கதிர்காமத்திலுள்ள ஏழு மலைகளை அறிவீர்களா?





வியப்பில் ஆழ்த்தும் விபூதி மலை!
!!

ஏழுமலையான் கதிர்காம கந்தன் ஆலயம் என்றால் அனைவருக்கும் கதிரைமலை ஞாபகத்துக்கு வரும்.
இந்த கதிரைமலையை ஏழுமலை என்றும் அழைப்பர்.

உண்மையில்  அது மட்டுமல்ல அங்கு ஏழு மலைகள் உள்ளன.

கதிர்காமத்தை சுற்றியுள்ள ஏழு மலைகளும் ஏழு வகையான மஹத்துவம் வாய்ந்தவை. 

அதில் கதிரமலை மட்டுமே எல்லோரும் செல்ல அனுமதி உண்டு. அது தவிர

 வள்ளி மலை, தெய்வானை மலை, இடும்பன் மலை, நாக மலை, பச்சைமலை, களுகுமலை மற்றும் விபூதி மலை ஆகிய மலைகளுடன் சேர்ந்து ஏழுமலைகளின் அதிசய சக்தி  கதிர்காம மண்ணை காலம் காலமாக இயக்குகிறது.

வியப்பில் ஆழ்த்தும் விபூதி மலை!.

இந்த ஏழுமலைகளில் விபூதி மலை பற்றி இம் முறை அறியக் கூடியதாக இருந்தது.

இது மிகவும் சிறப்பான தன்மை வாய்ந்தது.

கதிர்காமத்தில் இருந்து கித்துளபவ வழியாக சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இவ் விபூதி மலை அமைந்துள்ளது.

 விபூதி மலையில்  ஆடி மாதத்தில் திருவிழா காலங்களில் மட்டும் இயற்கையாக உற்பத்தியாகும் விபூதியே இங்கு பிரசாதமாக இன்றுவரை வழங்கப்படுகிறது.

 குறிப்பிட்ட வம்சத்தினரே இன்றுவரை இங்கு திருநீறு எடுக்கின்றனர். 

 கடந்த வாரம் இவ் விபூதிமலைக்கு  சித்தர்கள் குரல் அன்பர்கள் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜீ தலைமையில் சென்று பூஜை செய்து முறையாக விபூதி எடுத்த அற்புதமான நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இது தொடர்பாக காலாகாலமாக விபூதி எடுத்து விற்பனை செய்து வரும் அங்குள்ள  ரவீந்திரன் என்ற இளைஞரை பேட்டி கண்ட போது அவர் பின்வருமாறு தெரிவித்தார்..
" நாங்கள் பிறந்த நாளிலிருந்து இந்த தொழிலைத்தான் செய்து வருகின்றோம். இந்த விபூதி மலையானது கதிர்காம கந்தனின் ஆடிவேல் விழா திருவிழா காலத்தில் அதாவது 15 நாட்களில் மாத்திரம் தான் இப்படியாக மணல் போன்று விபூதியாக வரும். ஏனைய நாட்களில் வெள்ளை நிற பாறையாகவே இருக்கும் .உடைக்கவும் முடியாது .எடுக்கவும் முடியாது .இது  கந்தன் அருளாகத்தான் இருக்கும் ." என்றார்.

விபூதி மலையை பார்ப்பதானால்  சென்று பார்க்கலாம்.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர்