நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் இரண்டு மாணவர்களுக்கு மூன்று ஏ சித்திகள்




 


( காரைதீவு சகா)


சம்மாந்துறை  வலயத்துக்கு உட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் இம்முறை க.பொ.த.உயர்தரப்பரீட்சைக்கு  தோற்றிய 21 மாணவர்களுள் 18 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தி பெற்றிருக்கின்றார்கள் என்று பாடசாலை அதிபர் சீ.பாலசிங்கன் தெரிவித்தார்.


 அதில் இரண்டு மாணவிகள் மூன்று பாடங்களிலும் மூன்று" ஏ" சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருப்பதாக  அதிபர் தெரிவித்தார்.

அமிர்தலிங்கம் குவார்த்தனா, சிவபாலன் திவ்யபாரதி ஆகிய இரண்டு மாணவிகள் மூன்று "ஏ"
சித்திகள் பெற்றுள்ளனர்.

மேலும், பத்து மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

பின் தங்கிய சூழலில் உள்ள இப் பாடசாலையில் இத்தகைய சாதனை படைத்துள்ளமை பாராட்டுரியது என்று 
குறித்த மாணவிகளையும் சித்தி பெற்ற 10 மாணவர்களையும் அந்த பாடசாலையின் மேம்பாட்டு நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி நிதர்ஷினி மகேந்திரகுமார், வலய கல்விபணிப்பாளர் எஸ் எம் .எம். அமீர் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

சித்தி பெற்ற மாணவர்களுக்கு காலை ஒன்றுகூடலில் பிரதி அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன், உயர்தரப் பிரிவு தலைவர்  ஆசிரியர் நடராஜா கோடீஸ்வரன் ஆகியோரின் ஏற்பாட்டில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதற்கு முன், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2018 இல் செல்வி  அரசரெத்தினம் மிதிலா என்ற மாணவி மூன்று "ஏ" சித்திகளை பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தார் , மற்றும் 2020 இல் செல்வராஜா லிபோஜினி என்ற மாணவியும் மூன்று 'ஏ" சித்திகள் பெற்று பேராதனை பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.