வியாழையில் நடுநிசியில் காட்டாற்று வெள்ளம்? பொருட்கள் அள்ளுண்டன: பாதயாத்திரீகர்கள் அல்லோலகல்லோலம்..
(வியாழையிலிருந்து காரைதீவு சகா)
ஆயிரக்கணக்கான கதிர்காம பாதயாத்திரை அடியார்கள் உறங்கி கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அடியார்கள் அல்லோலகல்லோலப்பட்டார்கள்.
இச்சம்பவம் நேற்று (24) செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றது.
பாரம்பரிய பாதயாத்திரை வரலாற்றில் இப்படி நடந்தது இதுவே முதல் தடவையாகும்.
விடிய விடிய மழை பொழிந்து கொண்டிருந்தது.
காட்டாற்று வெள்ளத்தால் திடீரென வியாழை ஆற்றின் நீர் மட்டம் 5 அடி வரை உயர்வடைந்தது.
இதனால் அடியார்கள் திக்குமுக்காட அரோகரா கோசம் விண்ணைப்பிளந்தது.
அடியார்கள் உயிரைக் கையில் பிடித்தபடி காட்டுக்குள் ஓடினர்.
ஆனால் அவர்களது உடைமைகளை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
அவர்களது உடுப்பு பைகள் உணவுப் பொதிகள் ரார்போலின் அனைத்தும் வெள்ளத்தில் அள்ளுண்டன.
அருகில் உள்ள வள்ளி அம்மன் ஆற்றில் நின்ற அடியார்களுக்கு இராணுவம் முன்னதாக அறிவித்தது.
ஆனால் ஆயிரக்கணக்கான அடியார்கள் தங்கியிருந்த வியாழையில் எந்த அறிவித்ததும் இல்லை. அதுவே நள்ளிரவு அவலத்திற்கு காரணம் என்று பாதயாத்திரை அடியார் மு.காண்டீபன்( காரைதீவு) கூறினார்.
அடியார்கள் பெரும் பீதிக்குள்ளானார்கள்.
Post a Comment
Post a Comment