ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் விற்பனை நிலையத்தில்நேர்த்தியான முறையிலும் பெற்றோல் வழங்கப்பட்டது




 


(சுகிர்தகுமார்)

  ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் விற்பனை நிலையத்தில்; நேற்று கியுஆர் பரிசோதனை மற்றும் வாகன இறுதி இலக்கத்தின் அடிப்படையில் சுமூகமாகவும் நேர்த்தியான முறையிலும் பெற்றோல் வழங்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் உத்தியோகத்தர்களின் கியுஆர் பரிசோதனை உதவியுடன் அக்கரைப்பற்று பொலிசாரின் ஒத்துழைப்போடு எரிபொருள் நிரப்பு நிலைய தலைவர் மற்றும் முகாமையாளர் உள்ளிட்ட ஊழியர்களால் பெற்றோல் விநியோகம் சீரான இடம்பெற்றது.
; பெற்றோல் விநியோகம் அமைதியான ஆரம்பமான நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும்  கூட்டுறவு சங்க ஆணையாளரின் அறிவறுத்தலுக்கு அமைய ஜெனரேட்டர் வசதியுடன் மக்கள் நலன் கருதி பெற்றோல் வழங்க எரிபொருள் நிரப்பு நிலைய நிருவாகம் நடவடிக்கை எடுத்தமை சிறப்பாக அமைந்தது.
எவ்வித தடைகளுமின்றி மிகவும் சீரான முறையில் 6 7 8 9 வாகன இறுதி இலக்கத்தினையுடைய வாகனங்களுக்கு எரிபொருள்; வழங்கப்பட்டதை காண முடிந்தது.
இதேநேரம் பெண்களுக்கும் மதகுருமாருக்கும்  ஒரு வரிசை எனவும் பெற்றோல் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
குறித்த எரிபொருள் நிலையத்திற்கு நேற்று வழங்கி வைக்கப்பட்ட 6600 லீற்றர் கிடைத்த நிலையில் குறித்த பெற்றோலை பிரித்து வழங்க கூடிய வாகனங்களுக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கிய சிறந்த முன்னெடுப்பை எரிபொருள் நிரப்பு நிலைய நிருவாகம் எடுத்திருந்தமை சிறப்பாக அமைந்தது.
மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு 1500 ரூபா வீதமும் ஆட்டோவிற்கு 2000 ரூபாவிற்கும் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு 7000 ரூபா வீதமும் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றது.
இதேநேரம் கியுஆர் பெறமுடியாத பொதுமக்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது