கல்முனை ஓ.எம்.அலியார் எரிபொருள் நிரப்பு நிலைய நிருவாகத்திற்கு நன்றிகள்




 


பாறுக் ஷிஹான்


 நேர்த்தியான முறையில்  டோக்கன் வழங்கப்பட்டு பெற்றோல் வழங்கப்பட்டமையினால் அதிகளவான பொதுமக்கள் எரிபொருளை பெற்றுச்சென்றுள்ளனர்.

திங்கட்கிழமை(25 ) கல்முனை  ஓ.எம்.அலியார் எரிபொருள் நிரப்பு    நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அமைதியான  முறையிலும் நேர்த்தியாகவும் முற்பகல் முதல் மாலை வரை பெற்றோல்  வினியோகிக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

இச்செயல்திட்டத்திற்கு கல்முனை பொலிஸ் நிலைய  உத்தியோகத்தகர்களும் பெற்றோல் நிலைய உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் இணைந்து வாகனங்களின் புகை பரிசோதனை அறிக்கை ஊடாக இறுதி இலக்கம் (6789) பரிசோதனை மேற்கொண்டு குறித்த எரிபொருளை கிரமமாக மக்கள் பெற்று செல்வதற்கு இத்திட்டத்தை மேற்கொண்டனர்.


இது தவிர இத் திட்டம் சிறப்பாக வெற்றியடைந்துள்ளதுடன் பொதுமக்களும் உரிமையாளருக்கு பாராட்டுக்களை சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

குறித்த திட்டம் வெற்றி பெறுவதற்கு இவ்எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு  முன்னால் மக்களை கூடுவதை பொலிஸார் தடுத்துள்ளதுடன் எரிபொருள் உரிமையாளரின் முறையான முகாமைத்துவ செயற்பாடும்   இத்திட்டம் வெற்றியளிக்க முழுக்காரணமாக அமைந்ததாக பொதுமக்கள் குறிப்பிட்டனர்.

மருதமுனை ,பெரியநீலாவணை ,கல்முனை , நற்பிட்டிமுனை,  சவளக்கடை  ,சாய்ந்தமருது, மாளிகைக்காடு  ,என பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வரிசையில் காத்திருந்து பல நாட்கள் காத்திருந்து ஏமாற்றமாக வீடு திரும்பிய  பலர் இத்திட்டத்தின் மூலம் பலன் பெற்றுள்ளதாக ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.

மேலும் பல நாட்களாக  வரிசைகளில் அடுக்கப்பட்ட  வாகனங்களுக்கு எரிபொருள் உரிமையாளரினால் பணிக்கமர்த்தப்பட்ட   பணியாளர்களே  வருகை தந்து  தொடர் இலக்கம் வழங்குவதுடன் நேர்த்தியாக இத்திட்டத்தை வெற்றி பெறச்செய்தமை குறிப்பிடத்தக்கது.

--