பிரபல பின்னணி இசை பாடகர் KK என அறியப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்(KRISHNAKUMAR KUNNATH) காலமானார்.
கிருஷ்ணகுமார் குன்னத் தமது 53ஆவது வயதில் நேற்றிரவு(31) காலமானார்.
பிரபல பாடகரான KK, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார்.
1968 ஆம் ஆண்டு டில்லியில் பிறந்த கிருஷ்ணகுமார் குன்னத், 1999ஆம் ஆண்டில் தனது முதலாவது அல்பம் பாடலை (Pal) வௌியிட்டிருந்தார்.
அன்னாரின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் திரையுலகத்தினர் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
கல்கத்தாவில் நேற்று(31) இடம்பெற்ற கல்லூரி கலாசார நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது, கிருஷ்ணகுமார் குன்னதிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத், மே 31-ஆம் தேதியன்று, மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சியின்போது அவருக்கு ஏற்பட்ட பிரச்னையால், சிஎம்ஆர்ஐ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
54 வயதான கேகே என்றழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், இந்திய சினிமா துறையில் குறிப்பிடத்தக்க பின்னணி பாடகராகத் தடம் பதித்தவர்.
90-களில் தலைமுறையினரால் பெரிதும் கொண்டாடப்பட்ட பல்வேறு பாடல்களை அவர் பாடியுள்ளார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அவர், இசைத் துறையில் எந்தவித முறையான பயிற்சியும் இல்லாமலே, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பெங்காளி, குஜராத்தி மொழிகளில் பல்வேறு பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார்.
கேகே 1968, ஆகஸ்ட் 23-ஆம் தேதியன்று, சி.எஸ்.மேனன் மற்றும் குன்னத் குனகவள்ளி ஆகியோருக்குப் பிறந்தார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு குறைந்த காலகட்டத்திற்கு மார்க்கெட்டிங் அசோசியேட்டாக பணியாற்றியவர், இசைத் துறையில் ஈடுபடுவதற்காக மும்பைக்கு இடம் பெயர்ந்தார்.
Twitter பதிவின் முடிவு, 1
1996-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். தமிழ் சினிமாவில் 1997-ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் பிரபல பாடலான ஸ்டிராபெர்ரி கண்ணே என்ற பாடல் முதல், காதல் வளர்த்தேன், உயிரின் உயிரே, காதலிக்கும் ஆசை இல்லை, அப்படி போடு எனப் பல பிரபல பாடல்களைப் பாடியவர், தமிழ் திரைப்படங்களில் இதுவரை அவர் சுமார் 66 பாடல்களைப் பாடியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் இறப்புக்கு, "கேகே என்று பிரபலமாக அறியப்பட்ட கிருஷ்ணகுமார் குன்னத்தின் எதிர்பாராத மரணம் வருத்தமளிக்கிறது. அவருடைய பாடல்கள் அனைத்து வயதினரின் மனதிலும் பலவிதமான உணர்ச்சிகளை ஏற்படுத்தின. அவருடைய பாடல்களின் வழியாக நாம் அவரை நினைவில் வைத்திருப்போம். அவருடைய குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
Twitter பதிவின் முடிவு, 2
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கேகே-வின் இறப்புக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அதில், "எனது 'உயிரின் உயிரே' பிரிந்துவிட்டது. பாடகர் கேகே-வுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர் கடைசியாகப் பாடிய கொஞ்சிக் கொஞ்சி பாடலை உலகம் புகழ்ந்துகொண்டிருக்கும் போது இந்த அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்," என்று தெரிவித்துள்ளார்.
Twitter பதிவின் முடிவு, 3
நேற்றிரவு ட்விட்டர் முழுவதும் ரசிகர்கள் அவருடைய பாடல்களையும் அவை ஏற்படுத்திய தாக்கத்தையும் குறிப்பிட்டு தங்களது இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒருமுறை அவர் பிபிசியிடம் பேசியபோது, அவரிடம் ஒரு நல்ல பாடகர் என்பதற்கான வரையறை என்னவென்று கேட்டதற்கு, "என்னைப் பொறுத்தவரை ஓர் இசைக்கலைஞரின் பாடலைத் தன் சொந்தப் பாடலாகப் பாடக் கூடியவர்தான் நல்ல பாடகர். பாட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம் அல்லது உங்கள் மனநிலை வேறு மாதிரியாக இருக்கலாம். ஆகவே, ஒரு நாளைக்கு ஒரு பாடலை மட்டுமே பதிவு செய்கிறேன். பாடகர் தானே பாடலை உணர முடியாமல் போனால், கேட்பவர் எப்படி அதை முழுமையாக உணர முடியும்?" என்றார் கேகே.
Post a Comment
Post a Comment