நிவாரணப்பொதிகள்




 


( காரைதீவு   சகா)


இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலை காரணமாக வறுமையில் வாழும் மக்களுக்காக, இந்திய தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பில் நிவாரணப்பொதியாக அரிசிப்பொதிகள் மற்றும் பால்மா பொதிகளும் வழங்கும் நிகழ்வு நாடுபூராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது..

 அதன் ஓரங்கமாக திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரனின்  ஒழுங்கு படுத்தலின் கீழ்  திருக்கோவில்,பிரதேசத்தில்,2150  நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.

மேலும் இப்பொதிகள் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு  பொருளாதாரஅபிவிருத்தி உத்தியோத்தர்கள்,சமூர்த்தி உத்தியோத்தர்கள் ஊடாக வழங்கப்பட்டது. 

மேலும் இந் நிகழ்வில் 
திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் ,உதவிச்செயலாளர் க.சதிசேகரன்,சமூர்த்தி தலைமையக முகாமையாளர்,கே..பரமானந்தம்,பிரதேச செயலக நிறுவாக உதியோத்தர் எஸ்.மோகனராஜா, சமூர்த்தி சமுகச்சூழல் பாதுகாப்பு உத்தியோத்தர் எஸ்.பி.சீலன்,சமுத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.....