(க.கிஷாந்தன்)
கொட்டகலை பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் கொட்டகலையில் இடம்பெற்றது.
சுப்பையா செல்லம் ஞாபகார்த்த கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில், தலைவர் எஸ்.பத்மராஜ் தலைமையில் கொட்டகலை சுகாதார. .பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் நூற்றுக்கும் அதிகமானோருக்கு இன்றைய தினம் (08.06.2022) உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மலையகத்தில் சுப்பையா செல்லம் ஞாபகார்த்த கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட சமூக நல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சிறந்த போஷாக்கான உணவு எனும் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் நிதியத்தின் செயலாளர் எம்.சொக்கலிங்கம், வி.ராமசாமி நாயுடு, அங்கத்தவர்களான டி.வடிவேல், எஸ்.மணிவண்ணன், யோகராஜா, மலர்வண்ணன், வைத்தியர் சுதர்ஷன், பொது சுகாதார அதிகாரி சௌந்தராகவன், திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ஸ்ரீ, சுகாதாரதுறை ஊழியர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment