சமகால பொருளாதார நெருக்கடியினால் சிக்கித் தவிக்கும் சொறிக்கல்முனை மக்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
கனடாவில் இருக்கின்ற பரோபகாரி திருவாளர் ரொபின் அவர்களது நிதி அனுசரணையில் ஆயிஷா பவுண்டேசன் நிறுவனம் சொறிக்கல்முனையிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த உதவியை வழங்கியுள்ளது.
அம்பாரை மாவட்ட சமூக செயற்பாட்டாளர் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த உதவி இந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்த உலர் உணவு விநியோகம் நேற்று திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் மாற்றுத்திறனாளி அமைப்பின் தலைவி அனுஷியா தலைமையிலே நடைபெற்றது .
75பயனாளிகள் அங்கு இந்த உலர் உணவு நிவாரணத்தை பெற்றுக் கொண்டார்கள்.
தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் சமூக சேவையாளர் வி.ரி.சகாதேவராஜாவும் கலந்து கொண்டு உரையாற்றிய தோடு நிவாரண பொருட்களையும் வழங்கி வைத்தார்.
அங்கு சமூக செயற்பாட்டாளர் ஜெயசிறில் உரையாற்றுகையில். இலங்கையில் குறிப்பாக அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் வறுமை ,பட்டினி ,பசி தாண்டவமாடுகிறது.
இலங்கையின் சமகால பொருளாதார நெருக்கடியினால் மக்கள் துன்பப்படுகிறார்கள். எனவே, புலம்பெயர் தேசத்திலுள்ள எமது உறவுகள் இந்த மக்கள் ஒரு வேளையாவது சாப்பிடுவதற்காக தங்களது பிறந்த நாள், திருமணநாள், நினைவு நாள் போன்ற நாட்களில் நிதி உதவி செய்து இந்த மக்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையூட்டுமாறு அன்போடு வேண்டுகிறேன்.
Post a Comment
Post a Comment