தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள்




 


வி.சுகிர்தகுமார்  


  இலங்கையில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் ஒற்றுமை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்து  பல்வேறு மதத் தலைவர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் இடையே நட்பும் பரஸ்பர நம்பிக்கையும் வலுப்பெற செய்யும் வகையிலான செயற்பாடுகள் மற்றும் மனிதாபிமான பணிகள் இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக தலகல ஸ்ரீ சித்தார்த்தா அறக்கட்டளையானது சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தின் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட 63.75 மில்லியன் செலவில் இலங்கை முழுவதும் 42500 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான தொண்டு அனுசரணையை ஆரம்பித்துள்ளது.
  இதன் ஒரு கட்டமாக இன்று  ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று 241ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஏ.எம்.சி அபயகோன் வழிகாட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் நீத்தை முகாம் பொறுப்பதிகாரி லெப்டினன் கேர்ணல் டபிள்யு ஜி என்.டி வீரசிங்க உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 இத்திட்டத்தின் முதற்கட்டமாக களுத்துறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, hர், திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, பதுளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய 11 மாவட்டங்களை உள்ளடக்கிய உள்ளடக்கிய 21,500 குடும்பங்களுக்கு உணவு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
அத்தோடு இரண்டாம் கட்டத்தின் கீழ் மீதமுள்ள 14 மாவட்டங்களில் வசிக்கும் மேலும் 21,000 குடும்பங்களுக்கு இந்த நிவாரணம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


  இந்த சமூக சேவையானது இலங்கை இராணுவத்தினரால் அந்தந்த மாவட்டங்களிலுள்ள சசனரக்ஷக சபைகளின் வணக்கத்திற்குரிய பிக்குகளின் வழிகாட்டலின் கீழ் மிகவும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  
இந்த சிறப்புத் திட்டம் இலங்கையில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் ஒற்றுமை மற்றும் சகவாழ்வை ஊக்குவிக்கிறது.  பல்வேறு மதத் தலைவர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் இடையே நட்பும் பரஸ்பர நம்பிக்கையும் வலுப்பெற்றுள்ளன.  இலங்கை அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்நோக்கும் நேரத்தில், இத்திட்டத்தின் விளைவாக அதிக அளவிலான வெளிநாட்டு நாணயத்தை ( $     200,000 க்கு மேல்) நாடு பெறுவது தேசிய அளவில் பெறுமதியான நன்மையாகும்.