அறவிட முடியாக் கடன்கள் தொடர்பில்மக்கள் வங்கியின் தெளிவுபடுத்தல்




 


மக்கள் வங்கியின் அறவிட முடியாக் கடன்கள் தொடர்பில், சமூக ஊடகங்களல் வெளியான தகவல்கள் தொடர்பில் அந்த வங்கி தெளிவுபடுத்தல்களை வழங்கியுள்ளது

இதன்படி, கடந்த கால அறவிட முடியாத கடன்களை அடிப்படையாக கொண்டு, எந்தவொரு கட்டணமும் கணக்குகளில் கருந்து கழிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் வழங்கப்பட்ட கடன்களே இவ்வாறு  அறவிட முடியாத பட்டியலில் இணைக்கப்படுவதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது

நிலைமையை சீர்செய்வதற்கு,


மேற்கொள்ள முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதன் பின்னரே, கணக்குகளில் இருந்து நிதி கழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது