(க.கிஷாந்தன்)
பெற்றோல் மற்றும் டீசல் பெற்றுக்கொள்ளும் நோக்கில் 13.06.2022 அன்றும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் வாகனங்களை காணக்கூடியதாக உள்ளது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 'பெற்றோல் இல்லை' என்ற பாதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
இதனிடையே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசலை மட்டுப்படுத்தி விநியோகிக்கின்றனர்.
இந்த நிலையில் மலையக பிரதேசங்களில் குறிப்பாக அட்டன் மற்றும் கொட்டகலை, நுவரெலியா, நானுஓயா, தலவாக்கலை போன்ற பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
அட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருளை பெற்றுக்கொள்ளுவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தது. ஒருபுறம் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காகவும், மறுபுறும் டீசலை பெற்றுக் கொள்வதற்காகவும் வாகனங்கள் வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால் பிரதான போக்குவரத்தில் வாகன நெரிசல் காணப்படுவதன் காரணமாக நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தலையிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குறித்த நிலையங்களிலிருந்து கையிருப்பில் உள்ள எரிபொருள் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.
Post a Comment
Post a Comment