முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ம் திருத்துவ‌து ப‌ற்றி ஆராய்ந்து கொண்டிருப்ப‌து ரோம் ப‌ற்றி எரியும் போது ம‌ன்ன‌ன் நீரோ புல்லாங்குழ‌ல் வாசித்த‌து போன்ற‌தாகும் !




 நூருள் ஹுதா உமர். 




நாட்டு ம‌க்க‌ள் ப‌சியாலும் பொருட்கள் த‌ட்டுப்பாடாலும்  வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கும் இந்த‌ நேர‌த்தில் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை திருத்துவ‌து ப‌ற்றி நீதி அமைச்ச‌ர் விஜேதாச‌ ராஜ‌ப‌க்ச‌ ஆராய்ந்து கொண்டிருப்ப‌து ரோம் ப‌ற்றி எரியும் போது அத‌ன் ம‌ன்ன‌ன் நீரோ புல்லாங்குழ‌ல் வாசித்த‌து போன்ற‌தாகும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

இதுப‌ற்றி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து, 
அண்மையில்  முஸ்லிம் விவாக-விவாகரத்து சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் நியமிக்கப்படட குழு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்க்ஷவை சந்தித்துள்ளனர். இதன்போது முஸ்லிம் விவாக சட்டம் தொடர்பில் மதிப்பீடு செய்து, முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடிய வயதை 18 ஆக அதிகரிப்பதற்கும் திருமணத்தின் போது சாட்சி கையெழுத்திடுவதற்கு பெண்களுக்கு வாய்ப்பளிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் பலதார திருமணங்கள் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டம் தவிர்ந்த, சகல முஸ்லிம் சட்டங்கள் தொடர்பிலும் மதிப்பீடு செய்து, மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய முறைமை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதாக செய்திக‌ள் வெளிவ‌ந்துள்ள‌ன‌.

இந்த‌க்குழு அமைச்ச‌ரை ச‌ந்தித்த‌ போது நாட்டு ம‌க்க‌ள் ப‌ட்டிணிக்கு முக‌ம் கொடுக்கும் நிலையில் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ம் ப‌ற்றி பேச‌ வேண்டாம் என‌ அமைச்ச‌ர் இந்த‌க்குழுவுக்கு சொல்லியிருந்தால் அது அமைச்ச‌ரின் நாட்டு ந‌ல‌ அக்க‌றையை காட்டியிருக்கும். முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ம் என்ப‌து முஸ்லிம்க‌ளுக்கு ம‌ட்டும்தானே த‌விர‌ இத‌னால் ஏனைய‌ இன‌ ம‌க்க‌ளுக்கு எந்த‌ பாதிப்பும் இல்லை. நூற்றாண்டு கால‌மாக‌ முஸ்லிம்க‌ள் இச்ச‌ட்ட‌த்தின் ப‌டி திரும‌ண‌ம் செய்து நூற்றுக்கு தொண்ணுற்றி ஒம்ப‌து வீத‌மானோர் ம‌கிழ்ச்சியாக‌ வாழ்கின்றான‌ர்.

உல‌கின் எந்த‌ ச‌ட்ட‌த்தாலும் நூறுவீத‌ திருப்தியை யாருக்கும் கொடுக்க‌ முடியாது. க‌ட‌ந்த‌ ஆட்சிக‌ளிலும் முஸ்லிம்க‌ளின் ச‌ட்ட‌ங்க‌ள், பெண்க‌ளின் ஆடைக‌ள் ப‌ற்றியே ஆட்சியாள‌ர் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்து க‌டைசியில் நாட்டை மிக‌ மோச‌மான‌ இன்றைய‌ நிலைக்கு த‌ள்ளிவிட்ட‌தை ச‌க‌ல‌ரும் பாட‌மாக‌ எடுத்துக்கொள்ள‌ வேண்டும்.

ஆக‌வே நீதி அமைச்ச‌ர் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்திருத்த‌ம் ப‌ற்றிய‌ அனைத்து குழுக்க‌ளையும் க‌லைத்து விட்டு இதில் எத்த‌கைய‌ த‌லையீடும் செய்ய‌ வேண்டாம் என‌ கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.